Header Ads

Breaking News

அதிகாரத்திலுள்ளோரை புகழ்ந்து, தன் வயிற்றை நிரப்புவது முஷார்ரபுக்கு புதிதான ஒன்றல்ல

அதிகாரத்திலுள்ளோரை புகழ்ந்து, தன் வயிற்றை நிரப்புவது முஷார்ரபுக்கு புதிதான ஒன்றல்ல,

வசந்தத்திலிருந்து தூக்கி, வீசப்பட்ட முஷார்ரப் செய்வதறியாது


நடு வீதியில் நின்றார். 

என்ன தான் இன்று அவருடன் பல முரண்பாடுகள் இருந்தாலும், அன்று அவருக்கு நடந்தது அரசியல் பழி வாங்கலே! அரசியல் பழி வாங்களில் வீழ்த்தப்பட்ட முஷார்ரபை கை கொடுத்து, தூக்கிவிட்டார் அ.இ.ம.கா தலைவர் றிஷாட் பதியூர்தீன். 

இது யாவரும் அறிந்த ஒரு விடயம். இதற்காகவே அவர் அ.இ.ம.கா தலைவருக்கு வாழ் நாள் முழுவதும் நன்றி கூற கடமைபட்டுள்ளார்.

தனது முதலாவது அரசியல் பயணத்தை அ.இ.ம.காவோடு ஆரம்பித்த முஷார்ரப் கட்சியின் தலைவரை போற்றி, புகழ்ந்தார். அவர் தலைவரை புகழும் வீடியோக்களை இன்றும் சமூக வலைத்தளங்களில் கண்ணுற இயலும்.

அவர் தலைவருக்காக உயிரையே மாய்ப்பது போன்று செயற்பட்டார். தனக்கு தேவையானதை தலைவரிடமும் சாதித்தார். 

இந்த ஏமாற்றை உண்மையென நம்பிய அம்பாறை மாவட்டத்தின் அனைத்து ஊர்களிலுமுள்ள அ.இ.ம.கா ஆதாரவாளர்களில் பெரும்பாலானோர் அவருக்கும் தங்களது ஒரு வாக்கை வழங்கினர். 

தனது காரியத்தை தலைவரை புகழ்ந்தே சாதித்தார் முஷார்ரப்.

கடந்த கோத்தாபாய ஆட்சியில் அ.இ.ம.கா எதிர்க்கட்சியில் பயணிக்க  வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. 

இந் நிலை அ.இ.ம.காவுக்கானது மாத்திரமானதல்ல. முழு இலங்கை  முஸ்லிம்களின் நிலையும் அவ்வாறே இருந்தது. அன்று மொட்டு அரசு முழு முஸ்லிம் சமூகத்தையும் கருவறுக்கும் முயற்சியில் இறங்கியிருந்தது. 

அதில் உச்சமான ஒரு செயற்பாடாக கொரோனாவால் மரணித்த முஸ்லிம்களின் ஜனாஸாக்களை பலவந்தமாக எரித்தது. மையத்தை எரித்து கொண்டிருக்கும் ஆட்சியாளர்களுடன் இணைந்து, ஒரு முஸ்லிம் தனது சுகபோகங்களுக்காக ஆளும் கட்சியாக பயணிக்கத் தான் இயலுமோ? ஒரு முஸ்லிமாக இருந்துகொண்டு முஸ்லிம்களை கருவறுக்க துடித்த அரசை ஆதரவளித்தவர் தான் இந்த முஷார்ரப்.

தனது தேர்தல் பிரச்சாரங்களில் பா.உறுப்பினர் முஷார்ரப் மொட்டை இகழ்ந்து, மக்கள் காங்கிரஸை புகழ்ந்தது யாவரும் அறிந்ததே! நிலைப்பாட்டை தலை கீழாக மாற்றினார். மொட்டை புகழ்ந்து, மக்கள் காங்கிரஸை இகழ்ந்தார். தனது பொக்கட்டை நிரப்பினார். 

கோத்தா அரசை புகழ்ந்தார். 

சிறிது காலத்திலேயே கோத்தாவின் வீழ்ச்சி ஆரம்பமானது. பெசில் களத்திற்கு வந்தார். பெசிலை புகழ்ந்து, கோத்தாவை இகழ தொடங்கினார். 

பெசிலின் கோவணமும் அவிழ்ந்தது. 

ரணில் ஆட்சி பீடமேறினார். 

ரணிலை புகழ்ந்து, மொட்டு ஆட்சியை விமர்சித்தார். 

முஷார்ரபின் அரசியலே வருவோரை எல்லாம் புகழ்ந்து, அதற்கு முன் இருந்தோரை இகழ்ந்து தான்.

தான் ஏறிய படிகளை நினைவில் வைத்து, நன்றி  செலுத்தாது போனாலும் பறவாயில்லை, அதனையே இடித்து, தலையணை ஆக்கும் மிக இழி அரசியலையே முஷார்ரப் கை கொள்கிறார். 

அதன் ஒரு அங்கமாகவே இன்று ஆளுநருக்கு பட்டர் பூச ஆரம்பித்துள்ளார் முஷார்ரப். இவரை புகழ்ந்தாலும் பறவாயில்லை, இவருக்கு முன்பு இருந்த ஆளுநர்களை இகழ்ந்துள்ளார். 


அடுத்த ஆளுநர் ஒருவர் வரும் வரை தற்போதைய ஆளுநர் புகழப்படுவார். இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. நாளை வேறொரு ஆளுநர் வந்தால்,புதிய ஆளுநர் புகழப்படுவார், தற்போதைய ஆளுநர் இகழப்படுவார்.


இவற்றை பார்த்து ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. 

இதுவே முஷார்ரபின் அரசியல் தந்திரம்.

No comments