Header Ads

Breaking News

குறிஞ்சாக்கேணிப் பாலத்தினை நிர்மாணிக்க சவூதி நிதி உதவி - தெளபீக் எம்.பி


நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக இடைநிறுத்தப்பட்ட குறிஞ்சாக்கேணிப் பாலத்தினை நிர்மாணிப்பதற்கு அல்லாஹ்வின் உதவியுடன் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் திரு. மாயாதுன்ன அவர்களிடம் பாராளுமன்ற உறுப்பினர் தெளபீக் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக  நெடுஞ்சாலைகள் அமைச்சில் நேற்று (27) பகல் 12 மணியளவில் இடம்பெற்ற சவூதி அபிவிருத்தி நிதியத்தின் (SFD) கலந்துரையாடலில் அதற்கான நிதி உதவியினை வழங்குவதற்கு சவூதி அபிவிருத்தி நிதியம் இணக்கம் தெரிவித்துள்ளது.

 மிக நீண்டகால தேவையாக இந்த பாலம் இருந்ததுடன், அண்மையில் இந்த பாலத்தில் இடம்பெற்ற விபத்தில் பலர் மரணித்தமையும் குறிப்பிடத்தக்கது. 


No comments